- Advertisement -
கொரோனா ஆபத்து கொடுப்பனவினை நிறுத்தியமை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார பிரிவினர் இன்று(27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை, குழந்தைகள் வைத்தியசாலை, மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மாற்று சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் 44 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து காலை 7 மணி முதல் ஐந்து மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
8 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த குருகே தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மருந்து விநியோகம், வைத்தியசாலை பராமரிப்பு உள்ளிட்ட பல செயற்பாடுகள் ஸ்தம்பித்திருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.