பாராளுமன்றத்துக்கு திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி

பாராளுமன்றத்துக்கு திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (21) முற்பகல், பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதியை, அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக்க கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, அருந்திக்க பெர்ணான்டொ மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான இசுரு தொடங்கொட ஆகியோர் வரவேற்றனர்.

அதனையடுத்து, அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஜனாதிபதி அவைக்குள் பிரவேசித்தார்.

ஜனாதிபதி அவைக்குப் பிரவேசிக்கும் போது, நிலையியற் கட்டளை 27/2இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

எதிர்க்கட்சித் தலைவரின் வாய்மூல கேள்விகளுக்கு, அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் அளித்த பதில்களை, ஜனாதிபதி செவிமடுத்துக்கொண்டிருந்தார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *