- Advertisement -
மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய – கரதமண்டிய பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது 35 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டினால் பலத்த காயமைடந்த குறித்த பெண் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் கூட்டினை மேற்கொண்ட நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.