புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே நான்கு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில், மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி இம்முறை அமைச்சரவை 20 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சி எம்பிக்களும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
பதவிப் பிரமாணத்தை தொடர்ந்து இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனினும், உத்தியோகப்பூர்வ தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.