தியவன்னா ஓயாவை நோக்கி மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த எண்ணெய் படலம் தொடர்பில் அமைச்சருக்கு கிடைத்த நிழற்படங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய முதல் புத்கமுவ பாலம் வரையான பகுதியில், எண்ணெய் படலம் தென்படும் நிலையில், குறித்த அறிக்கையில் அமைச்சருக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, எண்ணெய் படலம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நீரின் மாதிரிகளும் விசாரணை குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.