- Advertisement -
நேற்று நள்ளிரவு முதல் ரயில் பயணச்சீட்டு விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில்களுக்கான முன்பதிவு மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரயில்வே நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை நிலைய அதிபர்கள் இடைநிறுத்தியுள்ளனர்.
உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் திட்டமிட்டுள்ளதாக சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரயில்வே பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.