கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு ஆளுநர்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
அந்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார பதவியேற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.