- Advertisement -
பாகிஸ்தானில் வைத்து மிலேச்சத்தனமாக அடித்துப் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு பெற்றுகொடுக்கக்கூடிய சகல நிவாரணங்களையும் பெற்றுகொடுக்கப்போவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானிலுள்ள அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு உயர்ஸ்தானிகருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதென இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய, பிரியந்த குமார தியவடனவின் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படாதவாறு இருக்க அந்நாட்டு அரசாங்கம்
நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தாரை இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரத்ன நேற்று முன்தினம் (04) அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார். மேலும் பிரியங்க ஜயரத்னவின் எஞ்சிய உடல்பாகங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும் அவர் கூறினார்.
இதேவேளை இலங்கைக்கு எடுத்துவரப்படும் உடற்பாகங்கள் மீது பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு உடற்பாகங்களை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.