ரணில் விக்ரமசிங்க ஆறாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட போதே, இலங்கையில் அது பெரும் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது.
காரணம், ராஜபக்ஷ குடும்பத்துக்கு ரணில் விக்ரமசிங்க நெருக்கமானவராக அறியப்படுபவர். அவர் பிரதமராக இருப்பதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கலாம் என்று நம்பப்பட்டது.
இலங்கை பிரதமராக ஆறு முறை இருந்தாலும் தமது பதவிக்காலத்தை ஒரு முறை கூட ரணில் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இந்த நிலையில், அரசு எதிர்ப்பாளர்கள் ரணிலின் அலுவல்பூர்வ மாளிகைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவர் மீண்டும் ஒருமுறை பிரதமர் பதவியில் இருந்து வெளியேறுவேன் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
1977ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு ரணில் தேர்வானார். 1989ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணசிங்க பிரமதாஸ தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் ரணிலின் வளர்ச்சி வேகமெடுத்தது.
1993 முதல் 1994 வரை ரணில் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். எப்பாவல நகரில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது. அந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் உயிர் தப்பினார்.
நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியாளராக இருந்தார். ஆனால் அப்போது அவரது செல்வாக்கு படிப்படியாக குறைந்தது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் குறைந்தது 250 பேர் கொல்லப்பட்டபோது அவர் இலங்கை பிரதமராக இருந்தார்.
அந்த தாக்குதல்களுக்கு முன்னதாக உளவுத்துறை எச்சரிக்கைகள் விடுத்தபோதும் அது பற்றிய தகவல் தமக்கு வராமலேயே தவிர்க்கப்பட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார்.
ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமே பெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பிரதமரானபோது அவர் மீதான மக்கள் கோபம் அதிகரித்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.