Mon, Jun27, 2022
Homeதேசியசெய்திகள்பிற்பகல் வேளைகளில் மழையுடனான வானிலை

பிற்பகல் வேளைகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(23) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க