Thu, Jun30, 2022
HomeBreakingவெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையில் திருத்தம் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது சவூதி அரேபியாவுக்கு 25 வயதும், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 வயதும், ஏனைய நாடுகளுக்கு 21வயதாக உள்ளது.

இந்த நிலையில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வயதெல்லையைத் திருத்தம் செய்தல் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த உபகுழுவால் சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இலங்கைப் பெண்கள் வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்தம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க