லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நள்ளிரவு (21) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

157 ரூபாயாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 177 ரூபாயாகும். அத்துடன் எக்ஸ்ட்ரா பிரிமியம் 95 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 210 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 121 ரூபாயாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 15 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 159 ரூபாயாகும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *