பல்வேறு விழாக்களுக்காக பணம் வசூலிப்பது குறித்து சில அரச பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிக்க விசாரணை குழுக்கள் அனுப்பப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை கல்வி,உயர் கல்வி,தொழிற்கல்வி அமைச்சின் பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சினால் இதுபோன்ற செயல்களைத் தடைசெய்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இருந்தபோதிலும், பெற்றோரிடமிருந்து இதுபோன்ற பணம் வசூலிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.