Friday, March 29, 2024
Homeதேசியசெய்திகள்48 மணிநேரத்தில் முக்கிய அறிவிப்பு; இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

48 மணிநேரத்தில் முக்கிய அறிவிப்பு; இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

HTML tutorial

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, தேவையான வழிகாட்டுதல்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர், சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, விவசாயம், பொதுச் சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 53% பேருக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 30 வயதுக்கு மேற்பட்ட 98% மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் ஒரே டோஸைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்