இந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, இலங்கை – இந்திய இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார பரஸ்பர விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை,நேற்று புதன்கிழமை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது புதுடில்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலந்த மொரகொட, மற்றும் உயர்ஸ்தானிகரகத்தின் அதிகரிகள், இந்திய நிதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விரிவான பேச்சுக்களை நடத்துள்ளார்.
அத்துடன், இதுகால வரையிலும் இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையில் காணப்பட்ட பொருளாதார உறவுகளை நினைவுகூர்ந்தவர், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா வழங்கிய பூரணமான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஆதரவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய நிலையில் இலங்கை, மற்றும் இந்தியாவுக்கு இடையில் காணப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை மேம்பட்ட வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு நிதி அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவிலுள்ள சுலப் சர்வதேச சமூக சேவை நிறுவனத்திற்கும் விஜயம் செய்தார். அங்கு அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிந்தேஷ்வர் பதக் சுலப் கிராமை சந்தித்தார்.
பசில் ராஜபக்ஷ,இந்தியா,இலங்கை.நரேந்திர மோடி.India,Sri Lanka,Narendra Modi
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.