தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது.
மின்னணு பதிவேட்டில் இல்லாதவர்கள் அக்டோபர் 19ம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்க வேண்டும் என்று ம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பொது மக்கள் தங்கள் பெயர்கள் உள்ளதா என்பதை அந்தந்த கிராம அலுவரிடம் சரிபார்க்கலாம்.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று மக்கள் தமது பெயர் இருப்பை சரிபார்க்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.