நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(14) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
பின்னர் மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்களை பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 076 739 39 77 அல்லது 011 244 11 46 ஆகிய இலக்கங்களுக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.