- Advertisement -
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் குழு வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதேபோல அமைச்சரவைக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் நாட்டு நிலைமைகளை தெரியப்படுத்துவது முக்கியமான ஒன்று எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு, ஏற்படாது என்றார்.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பொதுவான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவிக்கையில், பண்டிகைக் காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
நாட்டை முடக்கி எம்மால் பயணிக்க முடியாது. நாட்டை முடக்காமல் இப்போதுள்ள நிலைமைகளுக்கு முகம்கொடுத்து, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி செயற்படுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.