Wednesday, April 17, 2024
Homeதேசியசெய்திகள்வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது

வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது

HTML tutorial

கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து காரை ஓட்டிச் சென்ற சாரதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்