காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கையில் சைக்கிள் பாவனையை அபிவிருத்தி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சைக்கிள்களை பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் சைக்கிள் பாதைகளை ஒதுக்குவது தொடர்பிலும் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலின் போது அல்லது போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் கிலோ மீற்றர் ஒன்றுக்கு 103.50 ரூபாயை அரசாங்கம் செலவிடுவதாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.