- Advertisement -
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை இன்று(29) அறிவித்துள்ளார். இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.