- Advertisement -
சேலம் குமாரசாமிப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பெங்களூருவைச் சேர்ந்த பிரதாப் என்பவருஜ் அவரது மனைவி தேஜ்மண்டல் என்பவரும் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அந்த பகுதியில் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகின்றனர். பிரதாப் தற்போது சென்னையில் உள்ள நிதிநிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகினறார்.
இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளருக்கு செல்போனில் அழைத்து தனது மனைவி செல்போனை எடுக்கவில்லை எனவும் அதனால் அங்கு சென்று அவரை தொடர்பு கொள்ள கூறுமாறும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, வீட்டின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்த போது அவரின் வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. மேலும், வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றமடைந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பரண் மேல் உள்ள சூட்கேஸை திறந்து பார்த்த போது கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று இருந்துள்ளது.
இந்த சடலம் தேஜ்மண்டல் என்பதை வீட்டின் உரிமையாளர் உறுதி செய்ததை அடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர்.
இதனை அடுத்து பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ,தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்த யாராவது கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.