கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுடன் தகாத முறையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டம் பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவரை காதலித்ததாக ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வேலியே பயிரை மேய்வது போன்று ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து உள்ளனர் என்பதும் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பல ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் முதல் முறையாக மாணவன் ஒருவருடன் தகாத முறையில் ஈடுபட்டதாக ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் காதலித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியையிடம் விசாரித்தபோது அவர் மாணவனை காதலித்தது உண்மை என தெரியவந்துள்ளதாகவும் இதனையடுத்து ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவனை ஒரு ஆசிரியை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்த சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.