- Advertisement -
வயிற்று வலிக்கு மெடிக்கல்லில் இருந்து வாங்கிய மருந்தை சாப்பிட்ட பச்சிளம் குழந்தை பலியான சோக சம்பவமொன்று திருச்சியில் பதிவாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதே ஆன குழந்தை வயிற்று வலியால் அழுதுள்ளது.
இதனையடுத்து அந்த பச்சிளம் குழந்தையின் தாய் மருத்துவரை அணுகாமல் அருகிலிருந்த மெடிக்கல்லில் இருந்து மருந்து வாங்கி குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.
ஆனால், குழந்தைக்கு வயிற்று வலி இன்னும் மோசமாகி துடித்துள்ளது. பயந்துபோன பெற்றோர் உடனே குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அத்துடன், உரிய அங்கீகாரம் இல்லாமால் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.