- Advertisement -
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7.45 நிலவரப்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 38 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 3 இடங்களிலும், மற்றவை ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதுபோல ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 120 இடங்களில் அதிமுகவும், 599 இடங்களில் திமுகவும், 28 இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தில் தேமுதிகவும், 6 இடங்களில் பிஜேபியும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடத்திலும், மற்றவை 118 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.