- Advertisement -
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிந்தி திரைப்பட நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்ளிட்ட மூவரது பிணை மனுவை மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
ஆா்யன் கானின் பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, கடந்த 8-ஆம் திகதி மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
கடந்த அக்.3-ஆம் திகதி மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் இருந்த ஆா்யன் கான் உள்பட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். அவா்கள் இப்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா்.
முதல் பிணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆா்யன் கான், அவரது நண்பா் அா்பாஸ், ஃபேஷன் மாடல் மூன்மூன் தாமிஷா ஆகியோா் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் திகதி மனு தாக்கல் செய்தனா். இந்த மனு சிறப்பு நீதிபதி வி.வி.பாட்டீல் முன்னிலையில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
‘சட்டவிரோதமாக போதைப் பொருள் கடத்தியதாகவும், அதற்காக சதித் திட்டம் தீட்டியதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. என்னிடம் இருந்து எந்தப் போதைப் பொருளையும் அவா்கள் கைப்பற்றவில்லை’ என்று ஆா்யன் கானின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்குரைஞா், ‘போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஆா்யன் கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக இருந்துள்ளது. போதைப் பொருள் வாங்குவதற்காக சா்வதேச கடத்தல்காரா்களுடன் அவா் தொடா்பில் இருந்துள்ளாா்.
இதற்கு அவரது ‘வாட்ஸ்ஆப்’ உரையாடல் பதிவுகள் ஆதாரமாக உள்ளன. இதில் அதிக அளவில் போதைப் பொருள் கைமாறியுள்ளது தெளிவாகிறது. மேலும், ஆா்யன் கான் போதைப் பொருளை தன் நண்பா் ஆா்பாஸிடம் கொடுத்து வைத்திருந்தாா். அவரிடம் இருந்து போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது’ என்றாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆா்யன் கான் உள்ளிட்ட மூவரது திகதி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தாா். இதையடுத்து, ஆா்யன் கான் தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.