Bear eating chocolates: இந்தியாவில் இருக்கும் வனவிலங்குகள் உணவு தேடிக் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது என்பது வழக்கம் ஆகிவிட்டன.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் குன்னூர் அருகில் இருக்கும் ஹை ஃபீல்டு என்ற பகுதியில் தனியார் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் கரடி ஒன்று நுழைந்துள்ளது. தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த சிசிடிவி காட்சியில்,” தேயிலைத் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த கரடி திடீரென சாக்லேட் தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சி செய்கிறது. கதவு திறக்காத காரணத்தினால் அருகே இருந்த தடுப்புச் சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் கரடி நுழைந்தது.
Also Read: ஜோடி ஆப் மூலம் வந்த ஆப்பு – முதலிரவில் பெண் செய்த காரியம்
அங்கே தயாரித்து வைக்கப்பட்டிருந்த சாக்லேட்டுகளை உண்டு விட்டுச் சென்று விட்டது ” இவை அந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் வனவிலங்குகளைக் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.