- Advertisement -
[le id=”2″]
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.
அந்த வகையில் கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை நேரில் காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் சிறந்த காளைக்கு, முதல் அமைச்சர் சார்பிலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் கார் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், கிரைண்டர், குக்கர், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.