- Advertisement -
பள்ளி வகுப்பறையில் ஐந்து ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வந்தது.
மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டிய அசிரியர்கள் பள்ளி வகுப்பறையிலேயே இப்படி செய்யலாமா? என்ற கண்டனங்கள் வலுத்தன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவந்ததும், அம்மாநில பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆக்ரா மாவட்டத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில்தான் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது என்பதும், கடந்த மார்ச் மாதம் அந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதும் உத்திரபிரதேச கல்வித்துறையின் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லாததால், அந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி இருப்பது பார்க்கும்போது அவர்களுக்கு கல்வியறிவு இல்லை என்று தெரியவருகிறது .
வகுப்பில் நடனம் ஆடுவதன் மூலம் ஆசிரியர்கள் ஆசிரியர் சேவை இந்தியாவில் கல்வித் துறையின் மதிப்பை கெடுத்து விடுகின்றனர். கிராம மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றனர் என்று கல்வி அதிகாரிகள் தனது இடைநீக்க உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.