- Advertisement -
மரணமடைந்ததாக நினைத்து மையானத்தில் எரியூட்ட எடுத்து செல்லப்பட்டவர் சடலத்திற்கு உயிர்வந்த சம்பவம் தற்போது வைரலாக மாறியுள்ளது.
டில்லி துவாரகா வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் ஒரு முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கேன்சர் நோயாளியான அவருக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
அவரது குடும்பத்தினர் அவருக்கு வென்டிலேட்டர்களுக்கான பணத்தை கட்டி வந்தனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவர்களிடம் பணம் இல்லாமல் போனது.
அதனால் அவர்கள் மருத்துவமனையில் டாக்டர்களிடம் வென்டிலேட்டரை அகற்ற சொல்லி வீட்டிற்கு கூட்டி சென்றனர். வீட்டிற்கு சென்றதும் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.
அவர் வென்டிலேட்டர் இல்லாததால் இறந்துவிட்டதாக கருதி அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். இந்நிலையில் அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரியூட்ட தயாராகி கொண்டிருந்த போது அவர் கண்விழித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
அவர் எரியூட்டும் மேடையில் படுக்க வைக்கப்பட்டிருந்த போது அவர் கண்விழித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.