Sun, Sep25, 2022
Homeமாவட்டச் செய்திகள்காட்டுப்பகுதியிலிருந்து மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு

காட்டுப்பகுதியிலிருந்து மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு

வவுனியா – கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

நேற்று குறித்த சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க