Thu, Jun30, 2022
Homeமாவட்டச் செய்திகள்மலையகம்தலவாக்கலையில் எரிந்து சாம்பரான கடை

தலவாக்கலையில் எரிந்து சாம்பரான கடை

தலவாக்கலை நகரில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்து வந்த கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து நேற்று (15) இரவு 10 மணியளவில் ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உதவியாளர் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் மரக்கறி மற்றும் பழங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க