- Advertisement -
ஹட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் இன்று(07) காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்டவர் சுமார் 50- 60 இடையிலான வயது மதிக்கதக்க பெண் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர். (க.கிஷாந்தன்)
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.