ட்ரோன் கமராவை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நுகேகொடை வெளிபாக் பகுதியில் நேற்று(26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மஹரகம பகுதியை சேர்ந்த 32 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று (27) முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.