யாழ். நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரி நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் கை மற்றும் முதுகுப் பகுதிகளில் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொடிகாமம் கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற வெட்டுச் சம்பவத்தில் 36 வயதான நபர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு அசம்பாவிதங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சாவகச்சேரி மற்றும் கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.