Sri Lanka News Live and Tamil Breaking News

ஆசிரியர், பெற்றோர் திட்டியதால் 14வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

0 2

- Advertisement -

ஒரே ஒரு பாடத்தில் சரியாகப் படிக்கவில்லை என்று ஆசிரியர் புகார் சொன்னதால், அதை கேட்டு தனது மகளிடம் சொல்லி தந்தை கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர்.

சென்னை கொரட்டூர் கெனால் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து நேற்று மாலை 6 மணி அளவில் 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்தும், மாணவியின் பெற்றோர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மாணவி சென்னை கொளத்தூர் ஜி. கே. எம் காலனி எம்ஜிஆர் தெருவில் வசித்து வரும் பாஸ்கர் ராமலட்சுமி -தம்பதியின் மகள் என்பது தெரியவந்திருக்கிறது. பாஸ்கர் ஜி. கே. எம். காலனியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது முதல் மகள் வைஜெயந்தி(16). தான் தற்கொலை செய்து கொண்டவர் மாணவியின் பள்ளி அடையாள அட்டையை வைத்து கண்டறிந்தனர் போலீசார்.

அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியில் இருக்கும் வேலம்மாள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் வைஜயந்தி. ஊரடங்கினால் பள்ளிகள் செயல்படாத நிலையில் வீட்டிலேயே இருந்து ஆன்லைனில் படித்து வந்திருக்கிறார். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சில வாரங்களாக பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார் வைஜயந்தி.

வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 3 நாள்கள் மட்டுமே வகுப்பு நடத்தப் பட்டு வந்திருக்கிறது. அதன்படி நேற்று காலையும் வியாழக்கிழமை காலை ஏழு முப்பது மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி தனியார் வேன் மூலம் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் வழக்கம் போல் மாலை அதே தனியார் வேன் மூலம் 5 மணிக்கு வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடி இருக்கின்றனர். ஓட்டுனரிடமும் விசாரித்திருக்கின்றனர். அந்த சமயத்தில் தான் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பள்ளி அடையாள அட்டை மூலம் பெற்றோருக்கு பொலிஸார் போன் செய்தனர். இதை அடுத்து பதறியடித்துக்கொண்டு நேரில் வந்த பாஸ்கரும் -ராம லட்சுமியும் அது தங்கள் மகள் தான் என்று சொல்லி கதறி அழுதனர்.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பாஸ்கரிடம் விசாரணை நடத்தியபோது, சில வாரமாக பள்ளிக்குச் சென்று வந்தார். ஒரே ஒரு படத்தில் மட்டும் சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர் என்னிடம் போனில் தொடர்பு புகார் சொல்லி சொன்னார். இதனால் மகளிடம் ஏன் சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கண்டித்தேன்.

அதன்பின்னர் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலையில் என்ன ஆனதோ தெரியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More