தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தாலும், உருமாறியுள்ள ஒமைக்ரான் வகை அச்சம் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் ஒமைக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது.
இந்தநிலையில், ஒமைக்ரான் வைரஸ் பரவி அனைவரையும் கொன்று விடும் என்ற பயத்தில், மருத்துவர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், தடயவியல் பேராசிரியராக வேலை செய்து வந்தவர் மருத்துவர் சுஷில் சிங். 55 வயது மதிக்கத்தக்க இவருக்கு, சந்திரபிரபா என்ற மனைவியும், 21 வயதில் ஷிகார் சிங் என்ற மகனும், 16 வயதில் குஷி சிங் என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி சுஷில் சிங் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தியதில், சுஷில் சிங் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அவர்களிடன் வீட்டில் சிக்கியுள்ளது.
அதில், தான் குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் எனது குடும்பத்தை பிரச்சினையில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களை விடுதலை செய்து பிரச்சினைகளில் இருந்து வெளியேற்ற விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் அவரை தேடி வந்த நிலையில், சுஷில் சிங், கான்பூர் மாவட்டத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.