ஹிந்தி திரையுலகில் காலடி வைத்த இலங்கை பாடகி யொஹானி

Yohani Shiddat Title Track

‘மெனிகே மகே ஹிதே’ என்ற பாடல் மூலம் உலகிளவில் மிகவும் பிரபல்யமடைந்த இலங்கைப் பாடகி யொஹானிக்கு மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று கிட்டியுள்ளது.

இவர் முதல் முறையாக ஒரு பாலிவுட் திரைப்படத்தில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். ஹிந்தி திரையுலகில் பாலிவுட் படமான ‘ஷிட்டாட்’ (Shiddat)இன் தீம் பாடலை இவர் பாடியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை குணால் தேஷ்முக் இயக்கியுள்ளார். அவர் பாடும் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் அதிகாரப்பூர்வ பின்னணி பாடகராக இந்திய பாடகர் மனன் பரத்வாஜ் என்பதுடன், அதிகாரப்பூர்வ பின்னணி பாடகியாக யொஹானி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *