- Advertisement -
1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார் ஐஸ்வர்யா ராய்.அவர் அழகிப் பட்டம் வெல்லும் முன்பு டப்பிங் கலைஞராக விரும்பி டிவி நிகழ்ச்சிக்கான டப்பிங் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா ராயை தேர்வு செய்யவில்லையாம்.
டப்பிங் துறையால் நிராகரிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், அழகிப் பட்டம் வென்றதும் நடிகையாகிவிட்டார். கெரியரை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022ம் ஆண்டு தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
மகள் ஆராத்யா பிறந்த பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. மகளுடன் அதிக நேரம் செலவிடுவதையே விரும்புகிறார்.
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஃபேனி கான். அதுல் மஞ்சுரேகர் இயக்கிய அந்த படத்தில் அனில் கபூருடன் சேர்ந்து நடித்திருந்தார். 4 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகும் படம் பொன்னியின் செல்வன். அதிலும் அவர் வில்லியாக நடித்திருப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.