நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் குறித்து தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டிலேயே இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், படத்தில் இயக்குநராக கமிட்டாகியிருந்த விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டார்.
தொடர்ந்து மகிழ்திருமேனிக்கு அந்த சான்ஸ் கிடைக்க படம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து மேற்கொள்ளாமலேயே இருந்தனர். இதனிடையே கடந்த மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அஜித் வந்தும் சூட்டிங் துவங்காத நிலையில், தற்போது அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் விடாமுயற்சி படத்தின் முன் தயாரிப்பு பணிக்காக லண்டனில் உள்ளனர்.
இந்நிலையில், ஒருவழியாக இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த வாரத்தில் புனேவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் சென்னை திரும்பும் நிலையில், படத்தின் சூட்டிங் பூனாவில் துவங்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் அர்ஜூன்தாஸ் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் அஜித் ஜோடியாக நடிகை த்ரிஷா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகைள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு சம்மர் கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.