பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ் வாலா அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களின் பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகராக இருந்தவர் சித்து மூஸ் வாலா. 27 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் ஜவாஹர்கே கிராமத்தில் தனது ஜீப்பில் மூஸ் வாலா இரண்டு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது மூவர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதில் மூவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அவர்கள் சென்ற வாகனம் முழுவதும் துப்பாக்கி குண்டுகளால் சிதறி கிடந்துள்ளது.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மூஸ் வாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் சித்து மூஸ் வாலாவுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சித்து மூஸ் வாலாவின் கொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “திறமையான இசைக்கலைஞர் சித்து மூஸ் வாலாவின் கொலை, காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று தெரிவித்துள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி அரசு, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட 424 வி.ஐ.பி.,க்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.