அஜித்தின் அமராவதி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் சங்கவி. அடுத்தாக அவர் விஜய்யுடன் சேர்ந்து ரசிகன் படத்தில் நடித்தார்.
அதன் பிறகு விஜய்யின் விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய், சங்கவி இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். சங்கவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் கொளஞ்சி.
ஐ.டி. துறையில் வேலை செய்யும் வெங்கடேஷ் என்பவருக்கும், சங்கவிக்கும் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சங்கவி.
40 வயதுக்கு மேல் குழந்தையா என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். சான்வி என்று மகளுக்கு பெயர் வைத்திருக்கிறார். தன் செல்ல மகளின் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் சங்கவி. சான்விக்கு ஏற்கனவே நிறைய ரசிகர்கள், ரசிகைகள் கிடைத்துவிட்டனர்.
சான்வி ரொம்ப க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் அவ்வப்போது கூறி வருகிறார்கள். மேலும் சங்கவியிடம் அடுத்த படம் குறித்து எப்பொழுது அப்டேட் கொடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.