- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் கடந்த அக்டோபர் 28ஆம் திகதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
இரவு முழுவதும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலி மற்றும் உடல் அசௌகரியம் ஏற்பட்டதால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், “அக்டோபர் 28, 2021 அன்று, தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறந்த மருத்துவர் குழு அவரது உடல் நலனை முழுமையாக ஆராய்ந்து, ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சையை (carotid artery revascularization) பரிந்துரைத்துள்ளது.
அக்டோபர் 29 2021 அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரஜினிகாந்த் நன்றாகத் தேறி வருகிறார். இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்குத் திரும்புவார்” என்று காவேரி மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.
இது தொடர்பாக அவர் Hoote தளத்தில் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “சிகிச்சை முடிந்தது. நலமாக உள்ளேன். இன்று இரவு தான் நான் வீடு திரும்பினேன்.
எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல எனது நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.