Sun, Sep25, 2022
Homeசினிமாகையில் சிகரெட்டுடன் நடிகை ராதிகா! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்

கையில் சிகரெட்டுடன் நடிகை ராதிகா! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்

1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகா சரத்குமார், இன்றளவும் சினிமாவில் ஓய்வின்றி நடித்து வருகிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வரும் இவர், சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை படத்தில் அருண் விஜய்க்கு அம்மாவாக நடித்து அசத்தினார்.

பின்பு கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு தாயாக நடித்துள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை என்ற படத்தில் நடித்துள்ளார்.

கொலை படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடிகை ராதிகாவின் கேரக்டர் அடங்கிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதில் நடிகை ராதிகா ரேகா என்கிற பாஸ் கேரக்டரில் நடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்த படக்குழு, அவரின் தோற்றம் அடங்கிய போஸ்டரையும் வெளியிட்டிருந்தது.

அதில் கையில் சிகரெட் உடன் சோபாவில் கால்மேல் கால்போட்டு கெத்தாக போஸ் கொடுத்தபடி இருக்கிறார் ராதிகா. இதன்மூலம் அவருக்கு இப்படத்தில் மிகவும் பவர்புல்லான வேடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்த போஸ்டர் சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதில் நடிகை ராதிகா சிகரெட் வைத்திருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். பாஸ் என்றால் சிகரெட் வைத்திருக்கனுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க