Thu, Jun30, 2022
Homeசினிமாசாய்னா நேவாலை ஆபாசமாக விமர்சித்த நடிகர் சித்தார்த்... குவியும் கண்டனம்!

சாய்னா நேவாலை ஆபாசமாக விமர்சித்த நடிகர் சித்தார்த்… குவியும் கண்டனம்!

பிரபல இறகுப்பந்து வீராங்கணை சாய்னா நேவால். அடுத்தடுத்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் பஞ்சாம் என்ற பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி சென்ற கான்வாய் 20 நிமிடங்களுக்கும் மேலாக பாலத்தின் மேலேயே காத்திருந்து பின்னர் டெல்லிக்கு திரும்பினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவினர் பலரும் பிரதமர் மோடி வருகைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தாத பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்கள் பலருமே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது டிவிட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்த நடிகர் சித்தார்த், பாலியல் ரீதியாக பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் நடிகர் சித்தார்த்தை விளாசி வருகின்றனர்.

சிவசேனா ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதி சித்தார்த்தின் இந்த ட்வீட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் யாரும் பயன்படுத்த தகுதியற்ற மொழி. கருத்து வேறுபாடு எதுவாக இருந்தாலும், பேச்சில் நாகரீகம் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் “சாய்னா நேவால் நமது நாட்டின் விளையாட்டு பெருமை, அவருக்கு அரசியல் ரீதியாக கருத்துக் கூறவும் தேசம் தொடர்பாக கருத்து கூறவும் உரிமை உண்டு. உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் விவாதம் செய்யலாம்.

அவருடைய கருத்துக்கள் மற்றும் யோசனைகளை நீங்கள் கடுமையாக எதிர்த்தாலும் நீங்கள் ஒருபோதும் தரம்தாழ்ந்து பேசக்கூடாது. ‘தாராளவாத சொற்பொழிவு’ மீதான இந்த தாராளவாத அணுகுமுறை தீங்கு விளைவிக்கும் என்றும் நடிகர் சித்தார்த்தை சாடியுள்ளார்.

இதேபோல் பின்னணி பாடகியான சின்மயியும் நடிகர் சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இது உண்மையிலேயே அபத்தம், சித்தார்த். எங்களில் பல பெண்கள் எதற்கு எதிராக போராடுகிறார்களோ, அதற்கு நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள் என்று விளாசியுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் சித்தார்த்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நபரின் கணக்கு ஏன் இன்னும் உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்று சித்தார்த்துக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.

இதனிடையே தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா டிஜிபிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. அதில் விளையாட்டு வீராங்கணை சாய்னா நேவாலுக்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில், பெண்களை அவமானபடுத்தும் வகையில் வெறுப்பு ட்வீட் செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க