- Advertisement -
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கிராண்டாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றது. இதனால் படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஹோட்டல் அறை புக்கிங்கில் இருந்து சாப்பாட்டு செலவு வரை அனைத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே ஏற்றது.
இதனாலேயே திருமணத்திற்கு வந்தவர்களை அரங்கத்திற்குள் ஒரு போட்டோ கூட எடுக்கவிடாமல் பவுன்சர்களை வைத்து கண்காணித்தது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்.
ஆனால் விக்னேஷ் சிவன், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மீறி திருமணமான ஒரு மாதத்தை கொண்டாடும் வகையில் பிரபலங்களுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்தார்.
இதனால் கடுப்பான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை ஒளிப்பரப்புவதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இந்த விஷயம் நயன்தாராவுக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் வருத்தத்தில் உள்ளாராம் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் விக்கியும் நயன்தாராவும். இதனால் தனது காதல் கணவரான விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.