அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி.
தற்போது 16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை. ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கைலியா போஸிக்கு அவரது ரசிகர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.