தமிழை போன்றே தெலுங்கிலும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை பிந்து மாதவி தெலுங்கு பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான நாகார்ஜுனா , உங்களுக்கு தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என பிந்து மாதவியிடம் கேட்டார்.
அதற்கு “சார்… இது நல்லது இது நல்லது இல்லனு சொல்ல முடியாது, இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். சென்னைக்கும் எனக்கும் மிக ஆழமான உறவு இருக்கு, சென்னைக்கு என் இதயத்தில் தனி இடம் இருக்கு, சென்னையில் தான் நான் வேலை பார்க்கிறேன், என் தாய் மொழி தெலுங்கு.. ரெண்டுமே எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி தான்” என கூற, சூப்பர் பதில் என்று நாகார்ஜுனா பாராட்டினார் .
பிந்து மாதவியின் இந்த பதிலை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் டிரண்ட்டாக்கி வருகின்றனர். பிந்து மாதவி நடிப்பில் தமிழில் நடிகர் சசிகுமாருடன் யாமிருக்க பயமேன், மாயன் மற்றும் புரியாத புதிர் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.