- Advertisement -
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தில் எல்லை மீறிய சில ஆபாச காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. சாமி சாமி பாடலில் பாவாடையுடன் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக நடனம் ஆடுவதும், அல்லு அர்ஜுனுடன் காருக்குள் நெருக்கமாக அமர்ந்து காதல் செய்யும் காட்சியும், வசனமும் ஆபாசமாக இருப்பதாகவும், இந்த காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனால் பலரும் குழந்தைகளுடன் குடும்பத்தோடு படம் பார்க்க வருவதை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படத்தில் இருந்து படக்குழுவினர் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.