பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீடு அவரது சகோதரி அர்பிதாவின் பெயரில் உள்ளது. அந்த வீட்டில் சமீபத்தில் சல்மான் கான் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட திட்டமிட்டிருந்தார்.
கடந்த சில வருடங்களாகவே… இங்கு தான் அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. மேலும் சல்மான் கானுக்கு நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக தோட்ட பகுதியில் அதற்கான பணியில் சல்மான் காணும் ஈடுபட்டிருந்தார்.
திடீர் என… குழந்தைகள் இருந்த அறை ஒன்றில் பாம்பு புகுந்துள்ளது. இதை பார்த்து குழந்தைகள் பயம் கொண்டதால், பாம்பை ஒரு குச்சி மூலம் வெளியே எடுத்து செல்ல சல்மான் கான் முயன்றுள்ளார்.
அப்போது அந்த பாம்பு மூன்று முறை அவரது கையில் கண்டித்துள்ளது. அது விஷ பாம்பாக இருக்கும் என்கிற பயத்தால், சல்மான் கானை மருத்துவமனையில் அனுமதித்த அவரது குடும்பத்தினர் பாம்பையும் தங்களுடன் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அது விஷ பாம்பு இல்லை என்பது தெரிந்த பின்னரும், சல்மான் கானுக்கு பாம்பு கடியால் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதை சுமார் 6 மணிநேரம் கண்காணித்து உரிய சிகிச்சை அளித்தபின்னரே டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட இருந்த நேரத்தில் தனக்கு இப்படி நடந்தது குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார் சல்மான் கான்.
இந்நிலையில் அந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்தில் குடியிருக்கும் கேத்தான் கக்கட் என்பவர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் பிரபலங்கள் பலரின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பகீர் கிளப்பியுள்ளார்.
சல்மான்கானுக்கும் கேத்தான் கக்கட்க்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்துள்ளது.இது குறித்த அவதூறு வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது..
இது குறித்து பேசியுள்ள சல்மான் கானின் வழக்கறிங்கர்.. பண்ணை வீட்டுக்கு செல்லும் வழியை சல்மான் கான் அடைத்து விட்டார்..இதனால் கோபமடைந்த கேத்தான் கக்கட் இது போன்ற பொய் புகார்களை பரப்பி வருவதாக கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.